Toxic relationship between husband and wife

திருமணம் முடிந்து 3வருடம் ஆகிறது.மாமியார் கணவர் மனதளவில் காயப்படுத்துகிறார்கள்.நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன்.எது செய்தாலும் குற்றம்.குறைகளை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள்.நான் மிகவும் அமைதியான பெண் எதிர்த்து பேச மாட்டேன்.சண்டை போடுவதும் நான் விரும்பமட்டோன்.கணவர் கோபம் கொண்டவர்.தன் தாயிடம் நான் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்.நான் என் மாமியாரிடம் பேசவில்லை என்றால் என்னிடம் கணவர் பேசமாட்டார்.என் மாமியார் என்னை பற்றி குறைகளை தன் மகனிடம் குறைகளை அடுக்கி வைப்பார்.கோபமாக கத்தி திட்டுவார்.நீ உன் அம்மா வீட்டிற்கு செல் என பல முறை கூறி மனதை காயப்படுத்துகிறார்.பிறர் மனைவிகளுக்கு கணவர்கள் சரியில்லை என்றும் நான் பேசினால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க முடியும் என கூறுவார்.என்னிடம் காதலாக அன்போடு பேச நினைப்பதில்லை.என்னிடம் பேசினால் சண்டை வரும் என்று பேசாமலே இருப்பார்.செலவுக்கு பணமும் தரமாட்டார்கள்.உனக்கு ஆடை இருக்கிறது,மூன்று வேலை உண்ண உணவு இருக்கிறது,உறங்க அறை இருக்கிறது, இதற்கு மேல் என்ன தேவை உனக்கு? எப்போது சண்டை போட்டாலும் உனக்கு என்ன குறை வைத்துள்ளோம் என கேட்பார்கள்.எனக்கும் என் பிள்ளைகும் என் அம்மா வாங்கி கொடுத்த துணிகள் தான் அதிகம்.வீடு கட்ட 10பவுன் என் நகையை குடுத்திருக்கிறேன்.நானும் கணவரும் தனி தனி அறையில் தூங்குவோம்.ஆனால் என் மாமியார் இது வரை ஏன் ஒரே அறையில் தூங்குவதில்லை என கேட்டதும் இல்லை.என் கணவரை பிரித்துக் சென்றுவிடுவேனோ என பயமா என தெரியவில்லை ? நான் கவுன்சிலிங் அழைத்தால் நாம் ஏன் அங்கு போக வேண்டும்.பேசி தீர்த்து கொள்வோம் என கூறுவார் என் கணவர்.நிம்மதி இல்லாமல் மன அழுத்தம் அதிகமாக உள்ளது.தயவுசெய்து வழி சொல்லுங்கள்.நான் சேர்ந்து வாழலாமா அல்ல தனியாக வாழலாமா என்று.யாரும் வீட்டில் ஒன்றாக சாப்பிட மாட்டார்கள்.4பேர் கொண்ட வீடு.நான்,கணவர்,மாமனார், மாமியார்.மாமியார் ஆட்சி என் கணவர் மட்டுமே அவர் தைரியம்.