Cancellation of sale deed

2002ல் எனது தந்தையின் தாயின் சொந்தமான இடத்தை பெற்றுக்கொள்ள கிரய ஒப்பந்தம் (sale deed)செய்யப்பட்டு ரிஜிஷ்டரும் செய்யப்பட்டது.அப்பத்திரத்தில் 1,60,000 மதிப்பிலான இடத்தை 10,000 தற்போது முன்பணமாக கொடுத்துவிட்டு நாளது தேதியிலிருந்து மூன்று மாத காலக்கெடுவிற்குள் 1,50,000 கொடுத்து விட்டு தன் செலவில் கிரயம் செய்து கொள்வதாக சொத்து விவரக்குறிப்புடன் ஒப்பந்தம் செய்து ரிஜிஷ்டரும் செய்யப்பட்டது.பிறகு 25,000 மட்டும் பெற்றோம். 2003ல் எனது தந்தையின் தாய் இறந்துவிட்டார்.மீத பணமும் கொடுக்கவில்லை பிறகு எந்த தொடர்பும் இல்லாமல் 17 வருடங்கள் கழித்து தற்போது இடத்தை தரும்படி என் தகப்பனாரிடம் ஒப்பந்தம் செய்தவர் கேட்கிறார்.இப்போது அப்பத்திரம் செல்லுமா ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறதா?